அதிமுக கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மு.அமைச்சர் ஆய்வு

தர்மபுரியில் நாளை அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார்
தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதை அடுத்து, இன்று சனிக்கிழமை முன்னாள் அமைச்சரும் தர்மபுரி அதிமுக செயலாளருமான கேபி அன்பழகன் தலைமையில் தர்மபுரி நகர பகுதியில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதற்கு உண்டான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் நகர பூக்கடை ரவி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story