தூத்துக்குடியில் ஒரே நாளில் மூன்று பேருக்கு குண்டாஸ்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்சோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு - இந்த ஆண்டு இதுவரை 108 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 30.08.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் திருநெல்வேலி சொக்கத்தான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) அலெக்ஸ் (25) என்பவரையும், கடந்த 30.08.2025 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆண்டிகுமார்(24) என்பவரையும், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(26) என்பவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (27.09.2025) மேற்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story




