ஆண்டிமடம் அருகே ராங்கியம் முந்திரி தோப்பில் இடப்பிரச்சனை முன் விரோத தகராறில் பெண் தூக்கிட்டதால் பரபரப்பு.

X
அரியலூர், செப்.27- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி வேம்பு (44) என்பவருக்கும் மற்றொரு தரப்பினரான பிச்சப்பிள்ளை மகன் மணிகண்டன் (35) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகவும், அளவீடு செய்வதற்காக இன்று வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனது இடத்தை அளவீடு செய்யக்கூடாது எனக் கூறி எவ்வளவு தடுத்தும் கேட்காததால் மன உளைச்சலில் இருந்த வேம்பு திடீரென தனது முந்திரி வயலில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், காவலர்கள் ஒன்று கூடி அவரை காப்பாற்றி பெண் காவலர்கள் உடலை கையில் ஏந்தி நீண்ட நேரம் நின்றனர். பின்னர் 108 மூலம் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

