படந்தாலுமூட்டில் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்

படந்தாலுமூட்டில் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சார்ந்தவர் பொன்னையன் மகன் சத்தியதாஸ் (57). இவர் தனது வீட்டில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் 50 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். இத்தகவல் அறிந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மகிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் 50 டாஸ்மார்க் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதனை பதுக்கி வைத்திருந்த படந்தாலுமூடு பகுதியை சார்ந்த பொன்னையன் மகன் சத்தியதாஸ்சை (57) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story