வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
X
களியக்காவிளை
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகந்த் மற்றும் போலீசார் அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது கணியன்விளையில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட முயன்றபோது ஒருவர் தப்பி ஓடினார். போலீசாரின் சோதனையில் கணேஷ் 20 பாக்கட், 20 பாக்கட் கூலிப் கோட்பா புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் தங்ககிருஷ்ணன் மகன் வினோத் (40) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story