உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்

உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்
X
கன்னியாகுமரியில்
நாடு முழுவதும் உலக சுற்றுலா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா சுற்றுலா நிலையான மாற்றம் என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை படகில் பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தில் வைத்து சுற்றுலாத்துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம்,குங்குமம் திலகம் இட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிக களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி காமராஜ், உதவி சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் முருகபூபதி ஆகியோர் இந்த நினைவு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தப்பாட்டம். கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாணவ-மாணவிகளின் நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story