தி.மு.க. மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட

X
Komarapalayam King 24x7 |27 Sept 2025 8:23 PM ISTபேனர்கள் மர்ம நபர்களால் கிழிப்பு குமாரபாளையம் தி.மு.க. மாணவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகர தி.மு.க. தற்போது, வடக்கு, தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் நகர நிர்வாகிகள் பட்டியல் தற்பொழுது தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட குமாரபாளையம் தெற்கு நகர மாணவரணி அமைப்பாளர்கள் விவரம் நேற்று முன்தினம் தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் தெற்கு நகர , ஐந்து துறை அமைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் ஐந்து இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் ஐந்து பேனர்களையும் கிழித்துள்ளனர். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் மாணவரணி அமைப்பாளர்கள் விளம்பர பதாதைகளை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
