பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் நகராட்சி தலைவரிடம் மனு

X
அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் தலைவர் சாரதா சண்முகவேல், ஜெமினி பெருவழி பயணக்குழு குருசாமி கே.டி.ஆர். குருசாமி ஆகியோர் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தாராபுரத்தில் சோளக்கடை வீதி மற்றும் ஜவுளிகடை வீதியை இணைக்கும் பாலம் பழுதடைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோவில், அங்காளம்மன் கோவில்களுக்கு, இந்த பாலம் வழியாக தான் செல்ல வேண்டும். கார்த்திகை மாதம் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த பாலம் வழியாக வந்து செல்வர். எனவே தாராபுரம் நகராட்சி நிர்வாகம் இந்த பாலத்தை புதிதாக கட்டி தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

