போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

X
Komarapalayam King 24x7 |27 Sept 2025 8:40 PM ISTகுமாரபாளையத்தில் மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
செப்டம்பர் 25 உலக மருந்தாளுநர் நாளை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தமிழ் சிந்தனைப் பேரவை, JKK அன்னை சம்பூர்ணியம்மாள் மருந்தியல் கல்லூரி மற்றும் குமாரபாளையம் மருந்து வணிகர் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை குமாரபாளையம் எடப்பாடி சாலை உழவர் சந்தையில் இருந்து பேருந்து நிலையம் காவல் நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடத்தியது. பேரணியை தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் தமிழறிஞர் இரமேஷ் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மருந்தாளுநர்களை போற்றுவோம் என்ற தலைப்பில் தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் இரமேஷ் குமார் அவர்கள் விழிப்புணர்வு சொற்பொழிவாற்றினார். தமிழ் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் பரமன் பாண்டியன், காவேரி நகர் பூபதி, ஆண்டியப்பன் மற்றும் குமாரபாளையம் வட்டார மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சேகர், பழனிவேலு, கார்த்திக், சரவணன்,மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு குமாரபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் குடிநீர் பலகாரம் வழங்கி சிறப்பித்தனர்.
Next Story
