சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |27 Sept 2025 9:46 PM ISTசென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இலவச பல்துறை மருத்துவ பரிசோதனை முகாம் ராசிபுரத்தில் நடைபெற்றது. ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார் நினைவாக, அவரது சொந்த ஊரான ராசிபுரம் நகரில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் இரு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. 25-ம் ஆண்டாக ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கிய மருத்துவ முகாமினை ஸ்ரீராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் துணைவேந்தர் உமா சேகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.பாலாஜிசிங், பதிவாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி .சுரேந்திரன், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி.மோகன் சவுத்ரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் தலைமையில், பல்கலைக் கழகத்தின் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர். நவீன எக்ஸ்ரே வசதி, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட், மார்பக புற்றுநோய் பரிசோதனையான மெம்மோ கிராபி பரிசோதனை,நுரையீரல் பரிசோதனை, ரத்த அழுத்தம் பரிசோதனை, கண் மருத்துவம், பல் மருத்துவம், பொது மருத்துவம், இருதய நோய், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் மேலும் நடமாடும் பல்மருத்துவ வாகனம் போன்றவை கொண்டுவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. முகாமில் இலவச பல் செட், கண் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகளும் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு தேவைப்படுவோர் சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இம்முகாம் செப்.28 -ம் தேதியும் நடைபெறும். இந்த மருத்துவ முகாமில் முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி, முத்தாயம்மாள் முத்துவேல் ராமசாமி, தொழிலதிபர் தனபால் உடையார், பட்டணம் செங்குட்டு வேல், மற்றும் விஜய், வாசுதேவன், மருத்துவர்கள் முரளிதரன், ராகவன், என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
