விஜய் பிரச்சார கூட்ட நெரிசல்: கரூரில் போர்க்கால அடிப்படையில் உதவிகள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

X
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடம் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினை செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Next Story

