பெற்றோரை இழந்த எந்தக் குழந்தையும் படிப்பு நிறுத்தப்படாது

X
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி: பெற்றோரை இழந்த எந்தக் குழந்தையும் படிப்பு நிறுத்தப்படாது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் மிஷன் வத்சால்யா திட்டத்தில் பயன்பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சந்தித்து உரையாடினார். அவர் பேசியதில், “எந்த சிக்கல்கள் இருந்தாலும் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை நிறுத்தக்கூடாது. பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரையும் உயர்கல்வி வரை கொண்டு சேர்ப்பது நமது மாவட்டத்தின் முக்கிய குறிக்கோள். உங்களுக்கு எவ்வித சிரமம் இருந்தாலும் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கேட்கலாம்” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், அரசின் ரூ.5 லட்சமும், PM Cares திட்டத்தின் ரூ.10 லட்சமும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருப்பது, மாதம் ரூ.4,000 நிதியுதவி, மருத்துவ முகாம், மனநல ஆலோசனை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை போன்ற பல நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். மேலும், குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனை கண்காணிக்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறும் என்றும், கல்வி மற்றும் சுகாதாரத்தில் எந்த சிக்கலும் இருந்தாலும் ஆட்சியரை உரிமையோடு அணுக வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Next Story

