ஓபிஎஸ் அணி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிமுகவில் ஐக்கியம்

X
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் ஓபிஎஸ் அணி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஓபிஸ் அணி தொழிற்ச்சங்கம் "புரட்சி தலைவி அம்மா " ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் ஏற்பாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையேற்று வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதில், தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் S.மாரிமுத்து, தலைவர் ஆனந்த், செயலாளர் சுபாஷ் வேளாங்கண்ணி, பொருளாளர் A.பூண்டி செல்வம், உறுப்பினர்கள் செந்தில் குமார், T.மாரிமுத்து , P.மாரிமுத்து , இளையராஜா, இசக்கி ராஜா ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கழக வர்த்தகஅணி செயலாளர் சி. த.செல்லப்பாண்டியன் காக்கி சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

