டிஆர்பி ராஜா பெண்கள் குறித்து பேசியது மிகவும் தவறு வானதி சீனிவாசன் - காட்டம் !

டிஆர்பி ராஜா பெண்கள் குறித்து பேசியது மிகவும் தவறு வானதி சீனிவாசன் - காட்டம் !
X
தி.மு.க, ஜி.எஸ்.டி., கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான முக்கிய விமர்சனங்களை முன்வைத்து வானதி சீனிவாசன் தாக்கு.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், வரும் அக்டோபர் 5ஆம் தேதி துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருவதற்கான சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என தெரிவித்தார். எம்எஸ்எம்இக்கு 12% ஜி.எஸ்.டி. வரி காரணமாக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை மத்திய அரசிடம் தெரிவிக்கப் போவதாக கூறினார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வடமாநில பெண்களை குறைத்து பேசியதை அவர் கடுமையாக கண்டித்து, இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு எப்போதும் உயர்ந்த இடம் உண்டு என வலியுறுத்தினார். சாலை விபத்துகள் அதிகம் நிகழ்வதற்கு அரசு திட்டங்கள் மக்களிடம் சென்று சேராததே காரணம் என சுட்டிக்காட்டினார். கல்வி விழாவில் நடிகர்களை அழைத்து பேச வைத்தது “நாடகம்” என்றும், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை மறைக்க முயற்சி என விமர்சித்தார். கோவில்பாளையம் காப்பகத்தில் மாணவனை அடித்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளார். சிவகார்த்திகேயன் தி.மு.க அரசை புகழ்ந்து பேசியது குறித்து, “சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.கக்கு புதியதல்ல” என்று விமர்சித்தார். பூமார்க்கெட் உடை விவகாரத்தில், உடை அணிவது தனிப்பட்ட விருப்பம் ஆனால் பொது இடங்களில் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
Next Story