காவலர் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

காவலர் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு நோட்டு புத்தகங்கள்
X
காவலர் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய காவல்துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ம் நிலை காவலர் தேர்விற்க்கு தயாராகக் கூடிய முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு 205 பேருக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதன் புத்தகங்களை வழங்கி பேசும்பொழுது தேர்விற்கு என்ன தேவையோ அதற்கு தகுந்த மாதிரி தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அனைவரும் தமிழ்நாடு போலீஸ் இருக்கு தேர்வு ஆவதற்கு தனது வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் அவர் வழங்கினார். இதில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன், உதவி ஆய்வாளர் முத்துராஜா ஆகியோர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி உட்பட்ட மாதாநகர் மரிய மகாஹலில் வைத்து  2ம் நிலை காவலர் போட்டி தேர்வுக்கு எழுதும் மாணவ மாணவிகளுக்கு உதவியாக புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவதற்கு தக்க அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். இது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு இவ்வாறு தேர்வு பயனுள்ள புத்தகங்களை வழங்கியதற்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்ததோடு இதற்கு ஏற்பாடு செய்து புத்தகங்கள் இலவசமாக வழங்கிய தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story