பெரியகுளத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு

X
பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு அவரது வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். நேற்று (செப்.27) காலை எழுந்து வந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

