கோன் வைண்டிங் நூற்பாலையில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே கோன் வைண்டிங் நூற்பாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியை  சேர்ந்தவர் சக்திவேல்,50.  இவர் தனது வீட்டிற்கு அருகில் கோன் நூற்பாலை வைத்து தொழில் செய்து  வருகிறார் இந்நிலையில் நேற்றுமுன்தினம்  நூற்பாலையில் பணிகளை முடித்துவிட்டு இரவு 09:00  மணியளவில்  நூற்பாலையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அப்பொழுது நூற்பாலையிலிருந்து புகை  ஏற்படவே அருகில் இருந்தவர்கள் சக்திவேலுக்கு  தகவலை தெரிவித்தனர்.   சக்திவேல் நூற்பாலையை கதவைத் திறந்து உள்ளே செல்ல முயற்சி செய்த பொழுது, தீ கொழுந்து விட்டு எரிந்தது. குமாரபாளையம்  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி  அடித்து 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.   தீ விபத்தால்  சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது என  கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் மின் கம்பத்தில் சென்ற மின்சார வயர்கள் துண்டாகி கீழே விழுந்தன. அவற்றை மின்வாரிய  பணியாளர்கள்  வந்து, இணைப்புகளை சரி செய்து மின்சாரம் வழங்கினர்.
Next Story