நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேட்டி

நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேட்டி
X
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேட்டி அளித்தார்.
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி .எல் .ஏ.ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கரூர் துயர சம்பவம் போல் இனியும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் பார்வை இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். தூக்கத்தை இழந்த கருப்பு நாளாகும். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகமே கண்கலங்கி கொண்டிருக்கிறது இது போன்ற துயர சம்பவங்கள் முற்றுப் புள்ளியாக முடிவாக இருந்திட வேண்டும் நடிகர் விஜய் நம்மை விட கடுமையான ஒரு மனஅழுத்தத்திலும் துயரத்திலும் இருப்பார். இந்த நேரத்தில் அவருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறைசொல்வதைவிட மக்களை பாதுகாக்க கூடிய பணிகளை நாம் செய்ய வேண்டும் விரைந்து செயல்பட்டு உயிரிழப்பை அதிகரிக்காத வண்ணம் தடுத்திட்ட தமிழக அரசை இந்த நேரத்தில் பாராட்டுகின்றோம் துயரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கும் நம்மை விட அதிக துயரத்தில் இருக்கக்கூடிய தளபதி விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகதொண்டர்களுக்கும் ஆறுதலை கூறி என்றென்றும் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தில் விஜய்க்கு ஆறுதலாகஇருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். உடன் மாநில பொறுப்பாளர் கூடல் செல்வேந்திரன், மாநில இளைஞரணி பொறுப்பாளர் சுறா, சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர்கள்,அபுதாஹிர், துப்பாக்கி ரஹ்மத்துல்லாஹ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story