குடியிருப்பு பகுதி அருகே பொது மின் மயானம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட அருந்ததிய சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று அந்தப் பகுதியில் சமுதாய சுடுகாடு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் வீரபாண்டி பேரூராட்சி சார்பில் அருந்ததியர் சமுதாய சுடுகாட்டை பொது மின் மயானமாக அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மின் மயானம் பகுதியை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மின்மயானம் அமைக்கப்பட்டால் நாள்தோறும் ஏராளமான உடல்கள் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படும் நிலை ஏற்படும் இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தொற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.மின் மயானம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் எந்த வித கருத்தும் கேட்காமல் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தங்களது கோரிக்கை குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் கூறும் கிராம மக்கள் மின் மயானம் அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



