கோவில்பட்டி லேண்ட் மீடியேட்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார லேண்ட் மீடியேட்டர்ஸ் அசோசியேஷன் சார்பில், சட்ட விரோதமாக வழிகாட்டு மதிப்பை உயர்த்துவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் மூர்த்தி, செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் சார்பதிவாளருக்கு அளித்த மனுவில், அரசு ஆணையின்றி பதிவு அதிகாரிகள் 20-30% கூடுதல் மதிப்பில் பத்திரங்களை பதிவு செய்யுமாறு நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசின் நற்பெயர் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

