சுமையேற்றும் இறக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை!

சுமையேற்றும் இறக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை!
X
தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஞானசேகர் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மாரிமுத்து, முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், தொழிலாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். சுமையேற்றும் இறக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது காயம் ஏற்பட்டால் 50ஆயிரமும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.        விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிர்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, பாலசிங்கம், சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி, மற்றும் பொண்பாண்டி தட்சணாமூர்த்தி கருணாநிதி கலாஸ்டின் ஜான்டேவிட், பாக்கியசெல்வன் மாரியப்பன் இசக்கி முருகன் முருகன் முத்துராமன் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story