முஸ்லிம் லீக் முஸ்லிம் யூத் லீக் சார்பில் திண்டுக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம்

முஸ்லிம் லீக் முஸ்லிம் யூத் லீக் சார்பில் திண்டுக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம்
X
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் யூத் லீக் சார்பில் திண்டுக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் மஹாஜோதி ஹோட்டலில் நடைபெற்றது
திண்டுக்கல் மஹாஜோதி ஹோட்டலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் முஸ்லிம் யூத் லீக் தமிழ் மாநில தலைவர் பள்ளப்பட்டி முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் யூத் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் மங்களம் சிராஜுதீன் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தொடக்கத்தில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாகவும், அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, கரூர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தேனி ஆகிய மாவட்ட முஸ்லிம் யூத் லீக் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்கள் பகுதியில் சரி செய்ய வேண்டிய நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். இறுதியாக முஸ்லிம் யூத் லீக் தேசிய செயலாளர் மாமன்ற உறுப்பினர் திண்டுக்கல் முகமது இலியாஸ் நன்றியுரை வழங்கினார்.
Next Story