குமரி : தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்

குமரி : தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
X
காப்புக்காடு
தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் வைத்து தலைவர் மு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர் பேபி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர்களான சிந்துகுமார், சுரேஷ் மற்றும் இணைச் செயலாளர்களான புலவர் இரவீந்திரன், ஷஞ்சய் ஷாலஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொல்காப்பியரும், தொல்காப்பியமும் குறித்த சிறப்புரையினை மாஸ்தரன் சிங் வழங்கினார். நிகழ்வில் குமரி முத்தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், எழுத்தாளர் அரிகிருஷ்ணதாஸ், செயற்குழு உறுப்பினர்களான பிரான்சீஸ், கவிஞர் முருகன், மூர்த்தி, கோவிந்தராஜ் பணி நிறை தலைமை ஆசிரியர் ஸ்ரீ. பாபு, தமிழ்ச் செம்மல் முளங்குழி பா. லாசர், காப்புக்காடு, ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஷோபா, புஷ்பலதா ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். பொருளாளர் ரெவிந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story