சர்க்கரை நோயால் வலது காலை இழந்த இளைஞருக்கு
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வெண் மணச்சேரி ஊராட்சியில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, இளமுருகு செல்வன் என்பவர் தனது வலது காலை இழந்தார். தகவலறிந்த, ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், இளமுருகு செல்வனின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் மரிய.சார்லஸ், ஒன்றிய துணை செயலாளர் அனுஷியா ஜோதிபாசு மற்றும் ஜோதிபாசு. ஸ்டாலின், அழகு, நிர்மல், மதன், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், இளமுருகு செல்வனுக்கு செயற்கை கால், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆகியவை விரைவாக கிடைக்க அரசு அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.
Next Story



