கோவை வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து – பரபரப்பு !
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒப்பணக்கார வீதியிலுள்ள வணிக வளாகத்தில் சிம்கோ கடையின் மேல் தளத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விடுமுறை மற்றும் தீபாவளி வாங்கும் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story



