ஆயுத பூஜையை முன்னிட்டு கோவையில் வாழைப்பழ விலை உயர்வு !

ஆயுத பூஜையை முன்னிட்டு கோவையில் வாழைப்பழ விலை உயர்வு !
X
ஆயுத பூஜை முன்னிட்டு கோவை வாழைப்பழ சந்தையில் தேவை-விலை உயர்வு.
அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி கோவை ஆர்.எஸ்.புரம் வாழைக்காய் மண்டியில் வாழைப்பழ தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1 கிலோ செவ்வாழை ₹90, பூவன் ₹60, நேந்திரன் ₹40–50, கேரள பூவன் ₹70, நாடன் ₹60, மோரீஸ் ₹40–50, கற்பூரவள்ளி ₹60- க்கு விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பழம், பூக்கள் விலை அதிகரிப்பது வழக்கம். தேவை உயர்வால் இந்த ஆண்டு வாழைப்பழ விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், விவசாயிகள் விற்பனைக்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story