கோவை சூலூரில் உலக இருதய தின விழிப்புணர்வு வாக்கத்தான் !

X
உலக இருதய தினத்தை முன்னிட்டு, சூலூரில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த 5 கி.மீ. பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன், மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது டிஎஸ்பி தங்கராமன், “இதய ஆரோக்கியத்திற்கு கால்ப் மசுல்ஸ் வலுவாக இருப்பது முக்கியம். அதற்காக நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் அவசியம்” என தெரிவித்தார். இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது.
Next Story

