திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்க இடம் தேர்வு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்
Tiruchengode King 24x7 |29 Sept 2025 4:31 PM ISTசிலப்பதிகார அரங்கம் அமைக்க இடத் தேர்வு செய்யும் பணி திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் அறிவுசார் மையத்திற்கு பின்புற இடத்தை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன், மேற்கு மாவட்டதிமுக செயலாளர் கேஎஸ்.மூர்த்தி சேர்மன் நளினிசுரேஷ்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.கண்ணகி கோட்டம் அமைக்க என மலை சுற்று பாதை பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருந்தது அந்த பகுதிக்கு செல்ல போதுமான இடவசதி இல்லை என்பதால் கண்ணகி கூட்டம் அமைக்க இயலாமல் இருந்து வந்த நிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சட்டமன்றத்தில் எழுப்பிய கோரிக்கை அடிப்படையில் சிலப்பதிகார அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது அதன்படி அதற்கான இட தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. திருச்செங்கோட்டில் சந்தைபேட்டை அருகில் உள்ள அறிவு சார் மையத்திற்கு பின்புறம் உள்ள சுமார் (4 சென்ட் இடத்தில்)16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள இடத்தில் சிலப்பதிகார அரங்கம் அமைக்க முடியுமா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டஆட்சியர் துர்கா மூர்த்தி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி, திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் வருவாய் கோட்டாட்சியர் அங்கீத் குமார் ஜெயின்,திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் சுகாதார அலுவலர் டாக்டர் மணிவேல்,துப்புரவு அலுவலர் சோழராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், மாவட்ட இணைசெயலாளர் மைலீஸ்வரன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் தெய்வம் சக்தி, அமைப்புச் செயலாளர் நந்தகுமார், விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வெற்றி செந்தில், நகர செயலாளர்கள் அசோக் குமார், சேன்யோ குமார், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் அனைத்து ஆய்வுகளும் செய்யப் பட்டு உரிய அனுமதி பெறப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும் எனவும் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கப் பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வார சந்தை வளாகம், அறிவு சார்மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்க்கா மூர்த்தி ஆய்வு செய்தார்.
Next Story




