செங்கோட்டை ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

செங்கோட்டை ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்
X
ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவரா பகுதியில் யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பழைய குற்றால அருவி சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றி திரிகின்ற வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி பகுதிக்கு செல்ல காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நேரக் கட்டுப்பாட்டை வனத்துறையினர் விதித்துள்ளனர். இந்த நிலையில் ஒற்றை கரடியானது செங்கோட்டை பம்பு ஹவுஸ் சாலையில் நள்ளிரவில் சுற்றித் திரிகின்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையடிவார பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் தற்போது மக்கள் இருக்கும் பகுதிகளிலும் கரடி நாட்டம் நடமாட்டம் இருந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகே கரடி ஒன்று சுற்றி திரிந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Next Story