அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே கோதஸ்வரம்  என்ற பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அதே பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் பூசாரியாக மோகன்ராஜ் என்பவர் உள்ளார்.  நேற்று மாலை வழக்கம்போல் பூசாரி மோகன்ராஜ் பூஜைகள் செய்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோயில் தர்மகர்த்தா மோகன் குமார் என்பவர் மூலம் மார்த்தாண்டம்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது கோவில்  உண்டியலை உடைத்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது. உண்டியலில் சுமார் 5 ஆயிரம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் உண்டியலை  உடைத்து பணத்தை திருடி சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்
Next Story