டூவீலர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவர் பலி

டூவீலர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவர் பலி
X
மதுரை அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவர் பலியானார்.
மதுரை ஆரப்பாளையம் குறுக்கு தெரு கிருஷ்ணா பாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ராமேஷ்பாபு (31) என்பவர் திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் தனக்கன்குளம் அருகே சென்ற போது திருமங்கலம் கப்பலூர் எஸ் .புதூரைச் சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர் இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ரமேஷ் பாபுவை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (செப் .28) உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story