தூத்துக்குடியில் மண்டல ஹாக்கி போட்டி ஆரம்பம்

X
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தூத்துக்குடி மண்டல போட்டிகள் தொடங்கின. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. துவக்க விழாவில் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில், பள்ளி செயலாளர் ரத்தின ராஜா மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் போட்டியை தொடங்கி வைத்தனர். முதல் நாளில் நடைபெற்ற போட்டிகளில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி, சிவகங்கை புனித ஜோசப், கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. அருப்புக்கோட்டை எஸ்பிகே – சிவகங்கை புனித ஜோசப் அணிகளுக்கிடையேயான போட்டி 1–1 என சமனில் முடிந்தது. இப்போட்டியில் முதலிடம் பெறும் அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும். மேலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மண்டல அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
Next Story

