நவோதயா பள்ளி மாணவர்கள் கொங்கு சகோதயா கூட்டமைப்பு நடத்திய கபடி போட்டியில் சாதனை வெற்றி.

X
NAMAKKAL KING 24X7 B |29 Sept 2025 6:47 PM ISTகொங்கு சகோதயா கூட்டமைப்பு சிபிஎஸ்இ பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றது.
இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் போட்டிகள் நமது நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் கலந்துகொண்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 வயது முதல் 19 வயதுவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டார்கள் அதில் 17வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் மிகச்சிறப்பாக விளையாடி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வெற்றி பெற்று முதல் பரிசுக்கான கோப்பையை பெற்றனர். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் அனைவருக்கும் மெடல் மற்றும் சான்றிதழ்களை அணிவித்து பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் வாழ்த்தினார் அவர் பேசும் போது நமது மண்ணின் வீர விளையாட்டு அனைவராலும் விரும்பபடுகின்ற விளையாட்டு இந்த விளையாட்டில் தனித்தன்மையோடு விளையாடுவது சிறப்பானது என்று அனைவரையும் வாழ்த்தினார் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் என அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகளைக் கூறி பாராட்டினார்கள்
Next Story
