பதிவுத்துறை இணையதள சேவை முடங்கியது: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

X
தமிழகம் முழுவதும் பதிவுத்துறை இணையதளம் முடங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் சுமார் 40 மேற்பட்ட பத்திரபதிவு மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரபதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பதிவுத்துறை இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதபோல் தமிழகம் முழுவதும் இணையதளம் முடங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story

