தக்கலை : டாரஸ் லாரி - சொகுசு கார் மோதல்

X
குமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கடந்த 26 ஆம் தேதி அன்று மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சுபின் (37) உட்பட 11 பேர் வேளாங்கண்ணிக்கு சொகுசு காரில் சென்று விட்டு, இன்று தக்கலை பகுதியில் வரும்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாரஸ் லாரி மீது மோதியது. இதில் சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் விமல் என்பவருக்கும் காயமடைந்தார். கார் டிரைவர் சுபினை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

