மனைவியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி

X
குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பழனி (56). தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (53). பழனிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு பழனி அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவியின் தம்பி ராஜேந்திரன் வீட்டில் இருந்துள்ளார். அவர் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த பழனி சேனலை மாற்றி உள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அவரை சமாதானப்படுத்த கஸ்தூரி சென்றுள்ளார். இது பழனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பழனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கஸ்தூரியை குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை தம்பி ராஜேந்திரன் காப்பாற்ற வந்தார். அப்போது அவருக்கும் கத்தி குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கஸ்தூரிக்கு சரண்யா (27), சச்சின் குமார் ( 26) என்ற மகன் மகள் உள்ளனர்.
Next Story

