சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி

சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி
X
குளச்சல்
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் ஒரு மணி நேரம் 10 நிமிடம் விளையாடி சாதனை படைத்தனர். இதில் குமரி களரி கலைக்களஞ்சியம் நிறுவனத்திற்கு முதல் பரிசும்,  நாகர்கோவில் சலீம் ஆசான் என்பவருக்கு 2ம் பரிசு, ஆசாரிபள்ளம் மின்னல் சந்திரன் ஆசான்  என்பவருக்கு 3ம் பரிசு மற்றும் பல முக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story