போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

X
குமரி மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிசந்தையில் நேற்று நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோப குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் வெற்றி பெற்ற ஹரிஷி என்பவருக்கு ரூ. 4075 ,கோப்பை முதல் பரிசும், 2ம் பரிசு அஸ்வின், 3ம் பரிசு சச்சின், 4ம் பரிசு பவித் ஆகியோர் பெற்றனர். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர் ஹரிஹரசுதன் கலந்துகொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.
Next Story

