சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
X
கொளத்துபாளையம் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அமைச்சரிடம் பொதுமக்கள் மனு
தாராபுரம் அருகே உள்ள கொளத்துபாளையம் குறுக்குபாளையத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் உள்ள கூட்டுறவு நூற்பாலை பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த இடத்தில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அந்தபகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஏற்னவே மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அந்த பகுதியை சேர்ந்த சிவக்குமார், கார்த்திகேயன், காளிதாஸ், முரளிதரன் மற்றும் கோனேரிப்பட்டி பாலு உள்பட பலர் அமைச்சர் கயல்விழியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், கொளத்துபாளையம் பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிேயாரிடம் கலந்து ஆலோசித்து வந்ததாகவும் கூறினார். அதன்படி சிப்காட் திட்டத்தை ரத்து செய்து தருவதாக அமைச்சர் கூறினார்.
Next Story