புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

X
வெள்ளகோவில் போலீசார் வள்ளியரச்சல் கிராமம் நல்லூர் பாளையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையொட்டி பெட்டிக்கடை உரிமையாளர் நல்லசாமியை (வயது 65) கைது செய்து, பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 30 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.
Next Story

