இராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம் – குடும்ப சந்திப்பு

X
Rasipuram King 24x7 |29 Sept 2025 10:06 PM ISTஇராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம் – குடும்ப சந்திப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம், தனது குடும்ப சந்திப்பு விழா மற்றும் “தேசத்தைக் கட்டியெழுப்பும் விருது” (Nation Builder Award) வழங்கும் நிகழ்வை இராசிபுரம் ரோட்டரி ராயல் ஹால்" வளாகத்தில் நடத்தியது. சங்கத்தின் தலைவர் PHF Rtn. எல். ஹரிஹரன், செயலாளர் PHF Rtn. கே. கார்த்திக், பொருளாளர் PHF Rtn. ஆர். சோமகண்ணன், திட்ட தலைவராக IPP Rtn. எம்.பூபாலன், திட்ட இணைத் தலைவராக Rtn. எம். ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மண்டலம்-6 உதவி ஆளுநர் MPHF Rtn. எம். நந்தலால் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். 40 ஆசிரியர்களுக்கு விருது: கல்வித்துறையில் சிறப்பான பணி ஆற்றிய 40 ஆசிரியர்கள் “தேசத்தைக் கட்டியெழுப்பும் விருது” ( Nation Builder Award ) வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள்: அரசு உயர்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆர். புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்லசமுத்திரம் ஸ்ரீ விநாயகா உயர்நிலைப்பள்ளி,பிள்ளாநத்தம் மகேந்திரா சர்வதேசப் பள்ளி, காளிப்பட்டி AKV மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி, மல்லசமுத்திரம் P.U. தொடக்கப் பள்ளி எண்.3, குமாரபாளையம் AKV பப்ளிக் பள்ளி, மல்லசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி, அத்தானூர் ஞானோதயா சர்வதேசப் பள்ளி (Gnanodhaya International School) பாராட்டுக்கள்: விருது பெற்ற ஆசிரியர்களை சங்க உறுப்பினர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி அவர்களுக்கு ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story
