ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தாராபுரம் வட்டக்கிளை சார்பாக, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். ஊழியர்கள் பணியிட மாறுதல் செய்யக்கட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அமைதியான சூழலில் பணியாற்றும் வாய்ப்பை வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நல்லசேனாதிபதி கோரிக்கை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வாழ்த்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
Next Story

