கஞ்சா வைத்திருந்த மேற்குவங்க மாநில தொழிலாளி கைது

கஞ்சா வைத்திருந்த மேற்குவங்க மாநில தொழிலாளி கைது
X
கஞ்சா வைத்திருந்த மேற்குவங்க மாநில தொழிலாளியை காமநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்தனர்
பொங்கலூர் வாவிபாளையம் பகுதியில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மகஹோன் லஷ்கர் (வயது 35) என்பதும், பொங்கலூர் அருகே கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story