கரூர் தவெக விபத்தில் காயம்—கோவையில் சிகிச்சை பெறும் மனோஜ் !

X
கரூர் தவெக கூட்ட நெரிசலில் கண்ணூர்பேட்டைச் சேர்ந்த மனோஜ்குமார் காயமடைந்து, மேல்சிகிச்சைக்காக கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மாநில அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அமைச்சர் தெரிவித்ததாவது: மனோஜ்குமாருக்கு ஆரம்பத்தில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தற்போது தானாக சுவாசிக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து நாளை வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
Next Story

