பொள்ளாச்சி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து !

X
பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம், நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தேங்காய் நார் மற்றும் கொப்பரை பிரிப்பு ஆயில் மில்லில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் சுமார் 40 டன் கொப்பரைகள் எரிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மின்கசிவால் தீ ஏற்பட்டதா எனவும், வேறு காரணங்கள் உள்ளதா எனவும் ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

