வடிகால் பணி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

X
தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனம் சார்பில் வடிகால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பி. கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சஙகத்தின் வேண்டுகோளை ஏற்று ஸ்பிக் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து வடிகால் தூர்வாரி சீரமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் பாலு, மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

