தொட்டி பாலத்தில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமனம்

தொட்டி பாலத்தில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமனம்
X
மாத்தூர்
குமரியில் மிகவும் பிரபலமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது.  இங்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளின் காலாண்டு  விடுமுறை காலமானதால் ஏராளம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால்  பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று முதல் பாதுகாப்புக்காக அதிக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களையும் போலீசார் பரிசோதித்தனர்.
Next Story