குமரி : பூக்கள் விலை உயர்வு

X
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. -கிலோ 500 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 1500 ரூபாயாகவும், 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ 1200 ரூபாயாக உயர்ந்தது. தேவை அதிகரிப்பால் பூக்களின் விலையும், விற்பனையும் அதிகரிப்பு என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வந்திபூ 250 ரூபாயாகவும், கிரேந்தி 80 ரூபாயாகவும், வாடாமல்லி 60 ரூ, கொண்டை 80 ரூ,100, ரோஜாப்பூ 400 ரூபாயாகவும், அரளி பூ 500, கொழுந்து 150 ரூ, சம்பங்கி பூ 400 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.
Next Story

