இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அரியலூர் மாவட்ட ஐந்தாவது மாநாடு.

X
அரியலூர், செப்.30- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) அரியலூர் 5-வது மாவட்ட மாநாடு வாலாஜாநகரம் சமுதாயகூடத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட 5வது மாநாடு வாலாஜாநகரம் சமுதாயகூடத்தில் நடைபெற்றது. அரியலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆண்டிமடத்தில் கொண்டு வரப்பட்ட மாநாடு கொடியினை பெற்று மாவட்ட தலைவர் ரவீந்திரன் கொடியேற்றி மாவீரன் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து குணா, அருணன் ஆகியோர் வரவேற்று பேசினார்.மாநாட்டை மாநிலக்குழு உறுப்பினர் க.அருளரசன் துவக்கி வைத்து பேசினார். வேலையறிக்கை மாவட்ட செயலாளர் அருணன் முன்வைத்து பேசி விவாதம் நடைபெற்று SFI மாவட்ட செயலாளர் சரோஜினி வாழ்த்தி பேசினார். புதிதாக 11பேர் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளர் கே.குணசேகரன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் அரியலூர் சிமெண்ட் ஆலைகளின் விதிமீறல்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், செப் 16ம் தேதி அல்ராடெக் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளிவந்த புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக மருத்துவ முகாமை நடத்திட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு DYFI சார்பில் மேற்கண்ட கொரிக்கை மனு அளித்ததற்கு அலட்சியமாக பதில் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ,அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை துவங்கும் போது 1200 நிரந்தர தொழிவாளர்கள் பணி செய்தார்கள். இன்றைய நிலையில் வெறும் 40 நிரந்தர பணியாளர்கள் தான் பணியில் உள்ளனர். காலிபணியிடம் இருக்கிறது என்பதை கூட அரசு சிமெண்ட் ஆலை மறுத்து மலுப்பலன பதில் தருவது ஏற்றுகொள்ள கூடியவையல்ல, ஒய்வு பெற்ற பின் காலியாக உள்ள பணியிடத்தை நிரம்பாமல் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து ஆலை முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஒப்பந்த தொழிலாளர் வேலை செய்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பை தர வேண்டும், அரியலூர் சுற்றி உள்ள சிமெண்ட் ஆலையில் அரியலூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும், காலாவாதியான சுண்ணாம்பு சுரங்கங்களை காடுகளாக மாற்றிட வேண்டும், சிமெண்ட் ஆலைகளுக்கு செல்ல கூடிய கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி செல்வதை தடுக்க வேண்டும். ஆய்வில் தனிச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், செந்துறை பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டினை விரிவாக்கம் செய்து சாலையினை அகலப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில செயற்குழு சே.அறிவழகன் நிறைவு செய்து பேசினார்.
Next Story

