வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுகை கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை தலைமையில், நில பிரபுத்துவ, பண்ணை அடிமை முறையை எதிர்த்து, இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தமிழகஅரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



